தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்கள் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, கரூர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் 19ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மழை பெய்தால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவும் என்பதால் மக்கள் மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர்.