17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. புதிய புயலுக்கு வாய்ப்பில்லை..!

வரும் நாட்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் - பாலச்சந்திரன்..!

17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. புதிய புயலுக்கு வாய்ப்பில்லை..!

17 மாவட்டங்களில் கனமழை:

தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29ம் தேதி தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி  இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வருகிற 29-ம் தேதி 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

புதிய புயலுக்கு வாய்ப்பில்லை:

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன், தமிழகத்தில் அக்டோபர் 29ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும், வரும் நாட்களில் மழை படிப்படியாக அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் தற்போதைக்கு புதிய புயல் உருவாக வாய்ப்பில்லை எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.