தமிழகம், புதுச்சேரி மக்கள் கவனத்திற்கு! அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்!

தமிழகம், புதுச்சேரி மக்கள் கவனத்திற்கு! அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்!

நீலகிரி, திருப்பூர், கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது.

இதையும் படிக்க : அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ராகுல்காந்தி ஆதரவளிப்பாரா? மாநிலங்களவையில் ஆம் ஆத்மி பெரும்பான்மை வகிக்குமா?

அத்துடன், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிக பட்ச வெப்ப நிலையாக 39  டிகிரி முதல், 41 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்சமாக 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.