தமிழக மக்களே உஷார்...அடுத்த 3 நாட்களுக்கு...பாலச்சந்திரன் சொன்ன தகவல்!

தமிழக மக்களே உஷார்...அடுத்த 3 நாட்களுக்கு...பாலச்சந்திரன் சொன்ன தகவல்!

மாண்டஸ் புயல் சென்னைக்கு தென் கிழக்கே 550 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதாகவும், புதுச்சேரி  ஸ்ரீ ஹரிகோட்டா இடையே நாளை இரவு கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை மைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன் தெரிவித்திருக்கிறார். 

புயலாகவே கரையை கடக்கும்:

வங்கக்கடலில் நிலைக்கொண்டுள்ள மாண்டஸ் புயல், வலுவிழக்காமல் புயலாகவே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: புயலாகவே கரையை கடக்குமா மாண்டஸ்? இந்திய வானிலை சொல்லும் தகவல்!

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை:

இந்நிலையில் மாண்டஸ் புயல் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலைமைய தென் மண்டல தலைவர் பாலசந்திரன்,  மாண்டஸ் புயல் நாளை இரவு புதுச்சேரி மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு இடையே கரையை கடக்கும் எனவும், தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

மீனவர்களை எச்சரித்த பாலசந்திரன்:

அதாவது, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சேலம், தர்மபுரி, நாமக்கல், திருச்சி மற்றும் டெல்டா மாவட்டங்களில்  கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்தார். மேலும் சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மீனவர்கள் பத்தாம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் பாலசந்திரன் அறிவுறுத்திருந்தார்.

<iframe width="1280" height="720" src="https://www.youtube.com/embed/avd13dUuoNk" title="