மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

தமிழக கடலோர மாவட்டங்களில் மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மேலும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு : கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது.  இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும், அதனை ஒட்டியுள்ள உள் மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரும் 16 ஆம் தேதி வரை, கடலோர  மாவட்டங்கள், மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் எனவும் அந்த அறிக்கையில்,  குறிப்பிடப்பட்டுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.