விதிகளை மீறிய பேனருக்கு அனுமதியில்லை...... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என தமிழக அரசு அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விதிகளை மீறிய பேனருக்கு அனுமதியில்லை...... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு...

விழுப்புரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., இல்லத் திருமணத்திற்கு  அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி  பலியானார்.  இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியும், பலியான சிறுவனுக்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு, திமுக உள்ளிட்டோர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோதமாக பேனர் வைக்கும் நடைமுறைக்கு  முற்றிப்புள்ளி வைக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட நீதிபதிகள்,  விதிகளை பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் இந்து வழக்கு விசாரணையை விசாரணையை நான்கு வாரங்களுக்கு அவர்கள் ஒத்தி வைத்தனர்.