அடித்து தூக்கிய ஸ்டாலின்... அதே பழைய கெத்தோடு ஜொலிக்கும் சென்னை ரிப்பன் மாளிகை!!

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் கடந்த அதிமுக ஆட்சியால் எடுத்து மாற்றப்பட்ட  தமிழ் வாழ்க, தமிழ் வளர்க  என்ற பெயர் பலகை இன்று மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளில் மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அடித்து தூக்கிய ஸ்டாலின்... அதே பழைய கெத்தோடு ஜொலிக்கும் சென்னை ரிப்பன் மாளிகை!!

சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் பராமரிப்பு காரணமாக தமிழ் வாழ்க தமிழ் வளர்க என்ற பெயர் பலகை அகற்றப்பட்டது.நீண்ட நாட்களாக பராமரிப்பு பணி நடைபெற்று வரும் சூழலில், அண்மையில் பூந்தமல்லி நெடுஞ்சாலையான பெரியார் சாலையை கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என பெயர் மாற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதனை அடுத்து ரிப்பன் மாளிகையில் பராமரிப்பு காரணமாக தமிழ் வாழ்க, தமிழ் வளர்க பெயர் பலகை அகற்றப்பட்டது சமூக வலைதளங்களில் பேசும் பொருளாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ரிப்பன் மாளிகை பராமரிப்பு பணி 90 விழுக்காடு நிறைவடைந்ததை அடுத்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த தினமான இன்று மீண்டும் அப்பலகைகள் திறக்கப்பட்டன.அமைச்சர்கள் கே. என்.நேரு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு ஆகியோர் புதிதாக அமைக்கப்பட்ட பலகையினை திறந்து வைத்தனர். 

இந்த நிகழ்ச்சியில், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன், மாநகராட்சி ஆணையர் ககன் சிங் பேடி உள்ளிட்ட மாநகராட்சி உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.