சென்னை : தனியார் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தகவல்..!

சென்னை : தனியார் குடோனில் ஏற்பட்ட தீவிபத்தில் இரண்டு பேர் உடல் கருகி உயிரிழப்பு..!

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள கிடங்கில் ஏற்பட்ட தீ  விபத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் நிறுவன குடோனில் இன்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து  4 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 

இருவர் உயிரிழப்பு..

இந்த தீ விபத்தில்  தனியார் நிறுவன குடோனில் தங்கி பணியாற்றி வந்த ஊழியர்கள் கோபி மற்றும் சதீஷ் ஆகியோர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதனிடையே மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.