பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள்.. முதல் 22 நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு எத்தனாவது இடம்?

சாலை விதிகளை மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் அதிகம் உள்ள நகரங்கள் பட்டியலில் சென்னை 6 இடத்தில் உள்ளது.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள்.. முதல் 22 நகரங்கள் பட்டியலில் சென்னைக்கு எத்தனாவது இடம்?

சாலை விதிகளை மதிக்காமல் பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டும் ஓட்டுனர்கள் குறித்து நாடு முழுவதும் 22 பெருநகரங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பிரபல ஜும் கார் என்ற தனியார் வாடகை கார் நிறுவனம் நடத்திய ஆய்வில் சென்னை 6-வது இடத்தை பிடித்துள்ளது. 

அதன்படி சென்னையில் நாள் ஒன்றுக்கு 12க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடைபெறுவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை அலட்சியமான முறையில் சாலை விதிகளை மதிக்காமல் வாகனம் ஓட்டியதால் ஏற்பட்டவை என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

சுமார் 20 கோடி தரவுகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாகன வேகம், பிரேமக், இயக்கம் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மையானோர் சாலை விதிகளை சரிவர பின்பற்றியே வாகனம் ஓட்டுவதாகவும் 35.4 சதவீதத்தினர் சாலை விதிகளுக்கு உட்பட்டே வாகனம் ஓட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் எஸ். நடராஜன், சாலை விபத்துகளை தடுக்க 14 கணினி மயமாக்கப்பட்ட சோதனை தடங்களை அமைக்க தமிழக அரசு 10 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் இதில் முதல்கட்டமாக கரூரில் கணினி சோதனை தடம் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் கூறினார்.