சிதம்பரம் : 15வது நாளாக நடைபெறும் கோயில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணி...!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் 15வது நாளாக நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வு பணி துவங்கியது.

சிதம்பரம் : 15வது நாளாக நடைபெறும் கோயில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணி...!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட்ட சுவாமிகளுக்கு ஏராளமான தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள் உள்ளன. இந்த நகைகள் அனைத்தும் கடைசியாக கடந்த 2005 ஆம் ஆண்டிற்கு முன்னர் ஆய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்பட்டது. அதன் பிறகு கோயிலுக்கு வந்த புதிய நகைகள் எதுவும் ஆய்வு செய்யப்படவில்லை.

இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி தலைமையில் 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு கடந்த சில தினங்களாக நடராஜர் கோவிலில் நகை சரிபார்ப்பு மற்றும் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் 3 கட்டங்களாக இதுவரை 14 நாட்கள் நகை சரிபார்ப்பு ஆய்வுப் பணிகள் நடந்து முடிந்த நிலையில், இன்று 15வது நாளாக நகை சரிபார்ப்பு பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 

கோயிலில் நகைகளுக்காக உள்ள ஆவணங்களை பார்வையிட்டு அதன்படி நகைகள் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தி சரிபார்த்து வருகின்றனர். இதுவரை நடந்த ஆய்வில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை கோயிலுக்கு வரப்பட்ட நகைகள் குறித்த ஆய்வு நடந்து முடிந்துள்ளது. இந்த ஆய்வு இன்னும் சில தினங்கள் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.