சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தின விழா!

76வது சுதந்திர தினத்தை ஒட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோவிலின் பொது தீட்சிதர்கள், தேசிய கொடிக்கு மாலையிட்டு, மரியாதை செலுத்தி கோபுரத்தில் பறக்க விட்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் சுதந்திர தின விழா!

    76 ஆவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் வகையில், சிதம்பரம் நடராஜர் கோவிலின் 138 அடி உயர கிழக்கு கோபுரத்தில், மூவர்ண கொடியை ஏத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கோவில் பொது தீட்சித்தீர்கள் கொண்டாடினர். 

    நாடு முழுவதும் இன்று 76 வது சுதந்திர தின விழா மிக விமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகளவில் பிரபலமான சிதம்பரம் நடராஜர் கோவிலில், 76 வது சுதந்திர தின விழா படு விமர்சையாக கொண்டாடப்பட்டது,

    முன்னதாக மூவர்ண கொடியை நடராஜர் கருவறையில் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து ஊர்வலமாக எடுத்து வந்த கோவில் பொது தீட்சிதர்கள், 138 அடி உயரம் உள்ள கிழக்கு கோபுரத்தில், தேசிய கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

    பின்னர் கோவில் அலுவலகத்தில் வைத்து கோவிலுக்கு வரும் பொது மக்களுக்கு லட்டு உள்ளிட்ட இனிப்புகளை வழங்கி சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடினர்.