முதலமைச்சர் சென்னை ரிட்டர்ன்..! டெல்லியில் நடந்தது என்ன?

முதலமைச்சர் சென்னை ரிட்டர்ன்..! டெல்லியில் நடந்தது என்ன?

டெல்லி சென்றிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு சென்னை வந்தடைந்தார்.

ஒரு நாள் பயணம்:

அரசு முறை பயணமாக சென்னையிலிருந்து ஆகஸ்ட் 16 அன்று இரவு டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் சந்திப்பு:

ஆகஸ்ட் 17 மாலை பிரதமர் இல்லத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்தாக கூறப்படுகிறது. மேலும் தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான நீட் தேர்வில் இருந்து விலக்கு, மேகதாது விவகாரம், புதிய கல்விக் கொள்கை போன்றவற்றில் தமிழக அரசு நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைத்ததாகவும், நிறைவேற்றப்படாத பல தமிழக கோரிக்கைகளையும் பிரதமரிடம் வலியுறுத்திய முதலமைச்சர், கோரிக்கை மனுவையும் அளித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

மேலும் படிக்க: இபிஎஸ் அடுத்து செய்யப்போவது என்ன? இபிஎஸ்க்கு 3 வழிகள் தான்..!

முதலமைச்சர் ட்வீட்:

பிரதமருடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் நிகழ்வை தமிழகம் பிரம்மாண்டமாக நடத்தியதை பிரதமர் பாராட்டியதுடன், இது இந்தியாவிற்கு பெருமையான தருணம் என்று தெரிவித்ததாக பதிவிட்டுள்ளார்.