27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை பரிசீலித்து, கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளை அறிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

27 மாவட்டங்களில் மேலும் சில தளர்வுகளை அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

கோவை உள்ளிட்ட 7 மேற்கு மாவட்டங்கள், தஞ்சை உள்ளிட்ட 4 டெல்டா மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி நாளை காலை 6 மணியில் இருந்து மாலை 5 மணி வரை டீக்கடைகள் செயல்படலாம் என்றும், பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனிப்பு, கார வகைகள் விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை செயல்படலாம் என்றும், அங்கு பார்சல் முறை விற்பனைக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், 

அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளை பெற, நாளை முதல் இ-சேவை மையங்கள் செயல்பட அனுமதி வழங்கியுள்ளார்.

பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குதல், கட்டுமான பொருட்களுக்கு பணம் செலுத்துதல் உள்ளிட்ட பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவன அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், தமிழக அரசு அனுமதித்துள்ளது.