கர்ம வீரர் காமராஜரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

கர்ம வீரர் காமராஜரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 119 வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள காமராஜரின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த நாளையொட்டி சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்ட உருவப்படத்திற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இவரை தொடர்ந்து துணை சபாநாயகர் பிச்சாண்டி, அமைச்சர்கள் பொன்முடி,  ரகுபதி, தா.மோ.அன்பரசன், சாமிநாதன், சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், உள்ளிட்டோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ. ராசா , தமிழச்சி தங்கபாண்டியன் ,தயாநிதி மாறன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் காமராஜருக்கு மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் ஆட்சி பொற்கால ஆட்சி எனக் கூறப்படும் நிலையில் அதுபோன்ற ஆட்சியை கொண்டுவர பொறுப்பேற்கும் அரசுகள் உறுதியேற்கும் அளவில் பெரும் மதிப்புமிக்க தலைவராக விளங்கிய காமராஜருக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆண்டுதோறும் அவரின் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டும் சிறப்பாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு காமராஜருக்கான மரியாதையை அரசு அளித்துள்ளது.