கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...!

கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்...!

கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா இலச்சினையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3-ந் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் என்பதால் ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழாவாக கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.  அதன்படி, திமுக சார்பில் மாவட்டந்தோறும் கருணாநிதியின் சிலைகள் அமைப்பது என பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  

இந்நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கலைஞர் நூற்றாண்டு இலச்சினையை வெளியிட்டார். விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி கலந்து கொண்டார். 

அப்போது பேசிய மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி, அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி. எப்போதும் சமநிலையுடன் செயல்பட்டு வந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, நிர்வாக திறனில் கைதேர்ந்தவர் என்று பெருமிதம் தெரிவித்தார். 

இதையும் படிக்க : விமரிசையாக நடைபெற்று வரும் வைகாசி விசாகத் திருவிழா...!

இதனைத் தொடர்ந்து, கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அரசியல் பயணம், மக்கள் நலனுக்காக மேற்கொண்ட போராட்டங்கள், அவர் கொண்டு வந்த நலத் திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த புகைப்படங்கள் இந்த கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.