புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி..!

புதுச்சேரியில் கடந்த 10 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிய அரசு அமைந்தபின் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்திருந்தார். ஆனால் இந்த ஆண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாத நிலையே தொடர்ந்து வருகிறது.

புதுச்சேரி சட்டசபையில் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் முதலமைச்சர் ரங்கசாமி..!

புதுச்சேரியில் 15-வது சட்டசபையின் இரண்டாவது கூட்டத்தொடர் கடந்த மாதம் 23-ம் தேதி கூட்டப்பட்டது. அனைத்து அலுவல்களும் அன்றைய தினமே நிறைவேறியதால் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. தற்போதைய சூழ்ந்லையில் புதுவை சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடுகிறது. சபை நடவடிக்கைகளை திருக்குறள் வாசித்து சபாநாயகர் செல்வம் தொடங்கி வைக்கிறார்.

சபையில் அரசின் 5 மாத செலவினத்துக்கான நிதி ஒப்புதல் பெற இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார். மேலும் 2021-22ம் ஆண்டு நிதியாண்டிற்கான கூடுதல் செலவினங்களுக்கும் ஒப்புதல் பெறப்படுகிறது. புதுவையில் சட்டசபையில், காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மின்துறை தனியார் மயத்தை கைவிடக்கோரியும், நீட் தேர்வுக்கு விலக்குகோரியும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் அரசை வலியுறுத்தி வருகின்றன. இன்றைய கூட்டத்தின்போது அதை எதிர்க்கட்சிகள் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே சட்டசபை கூட்ட அரங்கில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை சபாநாயகர் செல்வம் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.