ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட முதல்வர் ஸ்டாலின்… இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டு காரில் சென்ற வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

ஆம்புலன்ஸுக்கு வழி விட்ட முதல்வர் ஸ்டாலின்…  இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

கடந்த 29ம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காரில் சென்னை விமான நிலையத்துக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, ஆம்புலன்ஸ் ஒன்று சைரன் ஒலித்த படி முதல்வர் சென்ற காருக்கு பின் வந்து கொண்டிருந்துள்ளது.

அதைக் கண்ட முதல்வர் ஸ்டாலின், ஆம்புலன்ஸுக்கு வழிவிட்டுச் செல்லுமாறு டிரைவருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன் படி, டிரைவர் ஆம்புலன்ஸுக்கு வழிவிட முதல்வர் சென்ற காருக்கு முன் ஆம்புலன்ஸ் சென்றுள்ளது

இந்த வீடியோவை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது. ஒரு உயிரைக் காப்பாற்ற செல்லும் ஆம்புலன்ஸுக்கு வாகன ஓட்டிகள் வழி விட வேண்டும்.

அதுவே, விதிமுறையும் கூட கூறலாம். ஆனால், இப்போதைய காலக்கட்டத்தில் சிலர் சாலை விதிமுறையை பின்பற்றுவதில்லை. அதனால், முதல்வர் ஸ்டாலின் செய்ததைப் போல மக்கள் அனைவரும் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி காவல்துறை இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.