ஆர்.எம்.வீரப்பனை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின்… பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து மகிழ்ச்சி!  

எம்.ஜி.ஆர். கழக நிறுவன தலைவர் ஆர்.எம்.வீரப்பன் 95-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர். கழக நிறுவன தலைவர் ஆர்.எம்.வீரப்பன் 95-வது பிறந்தநாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தி.நகரில் உள்ள ஆர்.எம்.வீரப்பன் இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் திமுக பொருளாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அதனை தொடர்ந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆர்.எம்.வீரப்பன் வீட்டிற்கு வந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் திமுக ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருவதாக ஆர்.எம்.வீரப்பன் செய்தியாளர்களை சந்திக்கையில் கூறினார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது என எம்.ஜி.ஆர் கழக நிறுவன தலைவர் ஆர்.எம்.வீரப்பன் பாராட்டு தெரிவித்தார்.  மேலும் எம்.ஜி.ஆர் கழகத்தின் நிறுவன தலைவர் ஆர்.எம்.வீரப்பன் தனது 95-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அரசிய கட்சி தலைவர்கள் மற்றும் எம்.ஜி.ஆர் கழக தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது என தெரிவித்தார்.