" முதலமைச்சர் பதவி விலக வேண்டும் " - முன்னாள் அமைச்சர் காமராஜ்.

" முதலமைச்சர் பதவி விலக வேண்டும் " - முன்னாள் அமைச்சர் காமராஜ்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே காந்தி பூங்காவில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம .ராமநாதன் ஏற்பாட்டில் முன்னாள் உணவுத்துறை அமைச்சர்  காமராஜ் தலைமையில் தமிழகத்தில் தொடரும் ஊழல் முறைகேடுகள், கள்ளசாராயம் விற்பனை,சட்ட ஒழுங்கு சீர்கேடு,கொலை,கொள்ளை, ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . 

அதன்பின் அமைச்சர்  காமராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,..

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்படும் அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது; இது போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் பதவி விலக வேண்டும் ", எனத்  தெரிவித்தார். 

மேலும், " கள்ளச்சாராயத்தால் 25 பேர் உயிரிழந்திருப்பது எந்த ஆட்சியிலும் நடைபெறாத ஒன்று.தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆட்சியில் ஊழல் மலிந்து போயிருக்கிறது. அதற்கு உதாரணம் தான் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீட்டில் நடைபெறும் ஐடி சோதனை சாட்சியாக அமைந்துள்ளது எனவும்  தெரிவித்தார்.

இதயும் படிக்க   | பிரதமரை விமர்சித்த மனோ...அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!

இந்த ஆர்ப்பாட்டத்தில் மயிலாடுதுறை முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ஆர் கே பாரதி மோகன்,ஒன்றிய செயலாளர்   மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர் .
 
இதையும் படிக்க   | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்...படை திரட்டும் இபிஎஸ்...அதிமுகவினர் போராட்டம்...!