கள ஆய்விற்காக விழுப்புரம் சென்ற முதலமைச்சர்...ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு!

கள ஆய்விற்காக விழுப்புரம் சென்ற முதலமைச்சர்...ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் திடீர் ஆய்வு!

கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ், 3 மாவட்டங்களில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”கள ஆய்வில் முதலைமச்சர்” என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். இரண்டு நாள் கள ஆய்விற்காக சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விழுப்புரம் நோக்கி புறப்பட்டார். 

இதையும் படிக்க : 'ஆபரேஷன் காவேரி' மீட்பு பணிக்கு ஒத்துழைக்க நாங்கள் தயார்... முதலமைச்சர் கடிதம்!

இந்நிலையில், பயணத்தின்போது செங்கல்பட்டு மாவட்டம் பரனூரில் உள்ள அரசு தொழு நோய் மறுவாழ்வு இல்லத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அங்குள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டறிந்த முதலமைச்சரிடம், அப்பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அவர்கள் மனு அளித்தனர்.

இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட கள ஆய்விற்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, அமைச்சர் செஞ்சி மஸ்தான் புத்தகம் வழங்கி வரவேற்றார். தொடர்ந்து அங்குள்ள ஒலக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முதலமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிகாரிகளிடம் பணிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் அறிவுரைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது, அலுவலகத்தில் உள்ள காலெண்டரில் தேதி கிழிக்கப்படாமல் இருப்பதை அமைச்சர் செஞ்சி மஸ்தான் சுட்டி காட்டினார். இதனால் பதறிய அதிகாரி ஒருவர், உடனடியாக அதனை சரிசெய்யும் காட்சியும் அரங்கேறியது.