மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

மாவட்ட அளவில் கொரோனா பரவலின் நிலை மற்றும் அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமை செயலாளர் வெ. இறையன்பு ஆலோசனை நடத்தினார். 

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை

மாவட்ட அளவில் கொரோனா பரவலின் நிலை மற்றும் அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினார். 

தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும், கோவை, சேலம், தஞ்சை உள்ளிட்ட சில மாவட்டங்களில் தொற்று பரவல் சற்று அதிகமாகவே காணப்படுகிறது. மேலும், கொரோனா 3-ஆவது அலை தொடர்பாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. இதற்கிடையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பு குறித்தும் அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் மாவட்ட அளவில் கொரோனா பரவலின் நிலை மற்றும் சில அரசு திட்ட செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு ஆலோசனை நடத்தினார். 

சென்னை தலைமைச்செயலகத்தில் காணொலி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொற்று அதிகரிக்கும் இடங்களில் மாவட்ட நிர்வாகம் செய்துள்ள சிறப்பு ஏற்பாடுகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து வருகிறார். மேலும், கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்கப்படுவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படுவதாக தெரிகிறது.