முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு...குழுவின் செயல்பாடு என்ன?

முதலமைச்சர் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழு...குழுவின் செயல்பாடு என்ன?

தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாக குழு அமைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 

காலநிலை மாற்ற நிர்வாக குழு:

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்ற நிர்வாகக்குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு, பல்வேறு திருப்புமுனை முயற்சிகளை மேற்கொள்வதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இதையும் படிக்க: பணி நிரந்தரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சீமான்!தமிழக அரசிடம் வலியுறுத்தியது என்ன?

இம்முயற்சி பாதையில், தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாடு நிறுவனத்தை தமிழகம் அமைத்துள்ளது.

எதற்காக இந்த குழு?:

எனவே, தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள கொள்கை வழிகாட்டுதலை வழங்கவும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை தணிக்கவும் இந்த நிர்வாகக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: பன்வாரிலால் புரோகித் கூறியதை ஏற்க முடியாது...கே.பி.அன்பழகனின் பதில் என்ன?

தொடர்ந்து இக்குழுவில் பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவனத் தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது