10 பொறியியல் கல்லூரிகள் மூடல்.. என்ன காரணம் தெரியுமா? - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

10 தனியார் பொறியியல் கல்லூரிகளை மூடுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

10 பொறியியல் கல்லூரிகள் மூடல்.. என்ன காரணம் தெரியுமா? - அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

பொறியியல் படிப்பினை நடத்தும் சுயநிதி கல்லூரிகள் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் அங்கீகாரம், அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதி பெற்று செயல்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு முன்னர் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனுமதியை பெற வேண்டும். ஆனால் பொறியியல் படிப்பில் வேலையின்மை காரணமாக ஏற்கனவே மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கொரோனா தாக்கம் எதிரொலியாக, சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில் 2022-23 கல்வியாண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான அங்கீகாரம் மற்றும் அனுமதி பெறுவதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் அனுமதி அளித்தது. 

ஆனால் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளதால் 10 தனியார் பொறியியல் கல்லூரிகள் அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கவில்லை. இதனை கவனத்தில் கொண்ட அண்ணா பல்கலைக்கழகம், மாணவர் சேர்க்கைக்கு அனுமதி பெறாத 10 கல்லூரிகளை மூட உத்தரவிட்டுள்ளது.