நாளைமுதல் அத்தியாவசிய கடைகள் திறப்பு: காய்கறி விற்பனைக்கு தயாராகி வரும் கோயம்பேடு மார்க்கெட்

நாளைமுதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், அத்தியாவசிய கடைகள் திறக்கப்படுவதையடுத்து, கோயேம்பேட்டில், அதிகாலை முதலே காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. 

நாளைமுதல் அத்தியாவசிய கடைகள் திறப்பு: காய்கறி விற்பனைக்கு தயாராகி வரும் கோயம்பேடு மார்க்கெட்

தமிழகத்தில் கடந்த மாதம் 24-ம் தேதிமுதல் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வருவதையடுத்து,  நாளை முதல் 14-ம் தேதிவரை, குறிப்பிட்ட மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள.

அதன்படி, காய்கறிகள், மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணிமுதல், மாலை 5 மணிவரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. நாளைமுதல் அத்தியாவசிய கடைகள் திறக்கப்படவுள்ள நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில், அதிகாலை முதலே, வெளி மாநிலங்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும், காய்கறிகள் வரத் தொடங்கியுள்ளன.

மொத்த வியாபாரிகள், பொருட்களை வாங்க அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை அளிக்கப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டிக்கும் நிலையில், ஊரடங்கிற்குப் பின் கடைகள் திறக்கப்பட உள்ளதால், இன்று கோயம்பேடு மார்க்கெட், திங்கட்கிழமை போன்று காட்சி அளித்து பரபரப்பாக இயங்கி வருகிறது.