தமிழகத்தில் தற்போது 3.13 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்: கொரோனா பாதிப்பில் சென்னையை முந்தி செல்லும் கோவை...

தமிழகத்தில் தற்போது 3.13 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்:  கொரோனா பாதிப்பில் சென்னையை முந்தி செல்லும் கோவை...

தமிழகத்தில் மேலும், 33 ஆயிரத்து 361 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில் கொரோனா பாதிப்பு 2-வது நாளாக மெதுவாக குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மெதுவாக குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் நேற்று புதிதாக 33 ஆயிரத்து 361 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் 2 ஆயிரத்து 779 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் கோவையில் 4 ஆயிரத்து 734 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கனவே 3 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது குறைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனாவால் மேலும் 474 பேர் இறந்த நிலையில், உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், 
கொரோனாவில் இருந்து மேலும் 30 ஆயிரத்து 63 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை 16 லட்சத்து 42 ஆயிரத்து 284 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3 லட்சத்து 13 ஆயிரத்து 48 ஆக அதிகரித்துள்ளது.