”மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது” - மாநில  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்!

பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது பொறுப்பற்றது மற்றும் நியாயமற்றது  எனவும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார்.

”மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசுவது நியாயமற்றது” - மாநில  செயலாளர் கே.பாலகிருஷ்ணன் காட்டம்!

மத்திய பல்கலைக்கழகங்களில் நுழைவுத்தேர்வை ரத்து செய்யக் கோரியும் , இந்தி மொழி திணிப்பை கைவிட வேண்டும் என வலியுறுத்தியும் சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்தில், நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வு விலக்கு கோரியும் முழக்கங்களை எழுப்பினர்.  

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாலகிருஷ்ணன், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழிகளை நாடு முழுவதும் அமல்படுத்தும் முயற்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். மேலும் 8 மாநில பள்ளிகளில் இந்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்பதற்காக 12 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இந்தியை தாய்மொழியாக ஏற்றுக்கொண்டவர்கள் 26 சதவீதம் பேர் மட்டுமே என ஆய்வில் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.  நுழைவு தேர்வுகளால் அடித்தட்டு மக்கள், பட்டியலின மக்கள் கல்வி பெற கல்லூரி வாசல் மிதிப்பதற்கு கடினமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.