பள்ளி மாணவிக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த உதயநிதி... குவியும் வாழ்த்துகள்...

பள்ளி மாணவிக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த உதயநிதிக்கு வாழ்த்துக்கள் குவிகிறது

பள்ளி மாணவிக்கு ஸ்மார்ட்போன் வாங்கிக் கொடுத்த உதயநிதி... குவியும் வாழ்த்துகள்...
நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் உதயநிதி ஸ்டாலின். வெற்றி பெற்ற நாள் முதல் தொகுதியில் சூறாவளியாய் சுற்றி வரும் உதயநிதி ஸ்டாலினுக்கு தொகுதி மக்கள் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. 
 
தொகுதியில் உள்ள குடிசைப்பகுதிகளில் கூட அதிரடியாக நுழைந்து அங்குள்ளவர்களிடம் சகஜமாக பேசி, அவர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்து வருகின்றார்.
இந்நிலையில் திருவல்லிக்கேணி கனால் பேங்க் பகுதியைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணிவி சுவேதா (17) ஆன் லைன் வகுப்புகளில் பங்கேற்க தனக்கு ஸ்மார்ட் போன் வாங்க இயலவில்லை என்று நேற்று மனு அளித்திருந்தார்.
அவருடைய கோரிக்கையை ஏற்ற உதயநிதி ஸ்டாலின் மாணவிக்கு புதிய ஸ்மார்ட் போனை பரிசளித்தார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். புதிய ஸ்மார்ட் போனை பெற்ற மாணவியும் அவரது குடும்பத்தினரும் உதயநிதிஸ்டாலினுக்கு மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர்.
 
உதயநிதியின் இந்த செயலை பார்த்த பலரும், கடந்த ஆட்சியில் கல்லூரி மாணவர்களுக்கு தரப்பட்ட சிம்கார்டுகள் இணைய இணைப்பு தடை செய்யப்பட்டுவிட்டது கல்லூரி மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் கலந்து கொள்வது சிரமமாக உள்ளது அதனை மீண்டும் புதுப்பித்து இணைய இணைப்பு கிடைக்க வழி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.