பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸார்...!

பாஜக அலுவலகத்தை  முற்றுகையிட்ட காங்கிரஸார்...!

ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.   


காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக இந்தியா முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக காங்கிரஸார் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க : சபாநாயகர் மீது காகிதங்களை கிழித்து வீசியெறிந்து ஆவேசம்...இரு அவைகளும் ஒத்திவைப்பு!

இந்த நிலையில் சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட காங்கிரஸார் திடீரென வந்ததால் போலீஸாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் தொண்டர்களை கைது செய்து அப்புறப்படுத்திய போலீசார், பாஜக அலுவலகத்திற்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கினர்.