பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள்..? இன்று ஆலோசனைக் கூட்டம்...

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ளது

பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள்..? இன்று ஆலோசனைக் கூட்டம்...

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் புதிய தொழில் திட்டங்களுக்கான அனுமதி, நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண்மை நிதிநிலை அறிக்கைக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது.

பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக தமிழக நிதிநிலை தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் நிதி அமைச்சர் பி.டி. ஆர்.பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட தமிழக அரசின் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழகத்தின் சட்டப்பேரவையில் வரும் 13ம் தேதி நிதிநிலை அறிக்கையும்,16ம் தேதி வேளாண்மைக்கான நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.