தொடர் கனமழை..! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்..!

தொடர் கனமழை..! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்..!

விடுமுறை அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு. இதனை தொடர்ந்து தேனி மாவட்டத்திலும் கனமழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேகமூட்டத்துடன் காணப்படும் சென்னை

கேரள கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சில மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகிறது. சென்னையில் பெரிதாக மழை இல்லை ஆனால் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.

இதையும் படிக்க: ஒரே வாரத்தில் வீடு..! வீட்டிற்கே சென்று ஆணை வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!

மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

இதனிடையே, மழை காரணமாக மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருவதில் எதிர்கொள்ளும் இன்னல்களை கருத்தில் கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் விடுமுறை அறிவித்துள்ளது.