பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு தொடர் காய்ச்சல்- கொரோனா பரவலா ? அச்சத்தில் பெற்றோர்கள்....

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால், பள்ளியின் பிற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் 50 பேருக்கு தொடர் காய்ச்சல்- கொரோனா பரவலா ? அச்சத்தில் பெற்றோர்கள்....

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாறாந்தையில் இயங்கி வரும் அரசு மேல்நிலை பள்ளியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை சுமார் 450 மாணவர்கள் பயில்வதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் கொரோனா தொற்று குறைவை அடுத்து தமிழக அரசு பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பள்ளியினை திறக்க அனுமதி அழித்திருந்தது. 

அதன்படி பள்ளிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் சுழற்சிமுறையில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் மாறாந்தை அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வரும் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் 22 பேருக்கு நேற்று ஒரே நாளில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தகவலறிந்து வந்த சுகாதாரத் துறையினர் நேரில் சென்று மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் ஈடுபட்டனர். பரிசோதனையின் முடிவு இன்னும் வராத நிலையில் இன்று மேலும் 30 மாணவர்களுக்கு தொடர் காய்ச்சல் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவியது. அடுத்தடுத்து மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருவதால், ஒரு வேலை கொரோனா தொற்றாக இருக்கலாமோ என்ற அச்சம் மற்ற மாணவர்கள் மற்றும் பெற்றோரிடையே நிலவியுள்ளது.