தொடர் மழை......குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு....

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

தொடர் மழை......குற்றால அருவிகளில் கடும் வெள்ளப் பெருக்கு....

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்தளவு காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென்காசி மாவட்டம் 
மேற்கு தொடர்ச்சி மலை வலைப் பகுதி, மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

இதனால் குற்றாலம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் காலை முதலே கனமழையும்,  தென்காசி, செங்கோட்டை, பாவூர்சத்திரம், கடையம், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழையும் பெய்தது.

மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குற்றாலம் மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலிஅருவி, சிற்றருவி உட்பட அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தற்போது கொரோனா பரவல் தடை காரணமாக குற்றால அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை என்பதால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. அருவியின் வெள்ளப் பகுதிக்கு யாரும் செல்லாமல் இருக்கும் வகையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இப்பகுதியில் மழை இன்னும் நீடித்தால் அருவிகளில் வெள்ளப் பெருக்கு மேலும் அதிகரித்து சேதத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.