இரண்டாயிரத்தை நெருங்கிய தமிழக கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த வாரம் வரை குறைந்து வந்த சூழலில், தற்போது மீண்டும் இரண்டாயிரத்தை நெருங்கியது மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

இரண்டாயிரத்தை நெருங்கிய தமிழக கொரோனா பாதிப்பு...

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா பாதிப்பு, மே மாதத்தில் இது உச்சமடைந்தது. அதனைத்தொடர்ந்து, படிப்படியாக பாதிப்பு வெகுவாக குறைந்து கட்டுக்குள் வந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

அந்தவகையில், இன்றைய கொரோனா நிலவரம் தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் இன்று புதிதாக ஆயிரத்து 997 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டோரில் இன்று 33 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 34 ஆயிரத்து 230ஆக அதிகரித்துள்ளது. 

கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தோரில் ஒரே நாளில் ஆயிரத்து 943 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதுடன், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 138ஆக உள்ளது. சென்னையில் மட்டும் புதிதாக 196 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், கோவையில் 220 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.