தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கிய கொரோனா தொற்று : தினசரி பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கிய கொரோனா தொற்றின் தினசரி பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்க துவங்கிய கொரோனா தொற்று : தினசரி பாதிப்பு 28 ஆயிரத்தை தாண்டியது!!

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒருநாளில் மட்டும் ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 912 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 28 ஆயிரத்து 561 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில், நேற்று ஒரே நாளில் மட்டும் ஏழாயிரத்து 520 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதே சமயம், நேற்று ஒரே நாளில் 19 ஆயிரத்து 978 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பினால் நேற்று மட்டும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 112 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 205 ஆக அதிகரித்துள்ளது.