கொரோனா தினசரி பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கோவை...

கொரோனா  தினசரி பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த கோவை...

தமிழகத்தில் தற்போது  கொரோனா தொற்று குறைந்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்,  தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 ஆயிரத்து 764 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம்  மொத்த பாதிப்பு எண்ணிக்கை 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.  இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 815 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம், தமிழகத்தில்  நேற்று 29 ஆயிரத்து 717 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 3 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு கோவையில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 4ஆயிரத்து 268 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 51 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 77 ஆக உயர்ந்துள்ளது