1ஆம் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்: முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை...

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் வரும் 1ஆம் தேதி ஆஜராகாவிட்டால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

1ஆம் தேதி ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்:  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு  நீதிமன்றம் எச்சரிக்கை...

கடந்த ஏப்ரல் மாதம் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் , தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் எஸ்.பி. ஒருவர் புகார் அளித்திருந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிறப்பு டிஜிபி மற்றும் அவருக்கு உதவிய செங்கல்பட்டு எஸ்.பி. உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்து வந்த சிபிசிஐடி போலீசார், சிறப்பு டிஜிபி மீதான 400 பக்க குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தனர்.

 இந்த வழக்கு இன்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஆஜராகாத சிறப்பு டிஜிபிக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் வரும் 1ஆம் தேதி நடைபெறவுள்ள விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.