”கோடிக்கணக்கான அளவில் முதலீடுகள் வருகின்றன” - கனிமொழி எம்.பி.

”கோடிக்கணக்கான  அளவில் முதலீடுகள் வருகின்றன” - கனிமொழி  எம்.பி.

கோடிக்கணக்கான அளவிற்கு முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்து கொண்டு இருப்பது தெரிந்தும் அரசியல் காரணங்களுக்காக விமர்சனங்கள் வைக்கப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். 

சென்னை எழும்பூரில் சில்லறை விற்பனையாளர்கள், வர்த்தகர்களுக்கான எதிர்காலத்திற்கான தீர்வுகள் குறித்த கலந்துரையாடல் நிகழ்வு  நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட திமுக துணைப் பொதுச்செயலாளர்   கனிமொழி நிகழ்ச்சியில் மேடையில் பேசியபோது, 

" இன்று என்னால் பெருமையாக சொல்ல முடியும் 49க்கும் மேற்பட்ட தொழில் முன்னெடுப்புகளுக்கான உற்பத்தி தளங்களையும் முதலீடுகளையும் உருவாக்கி இருக்கிறோம் என்பதில் எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிப்க்கோ மற்றும் சிப்காட்டை எனது தந்தை தான் தொடங்கி வைத்தார் என்பதில் பெரும் மகிழ்சச்இயாக இருக்கிறது " என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.   

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது அவர் பேசுகையில்,  " நாடாளுமன்ற திறப்பு விழா முறையாக நடத்தப்படவில்லை, அதனால் செல்லவில்லை என்றும், கோடிக்கணக்கான அளவிற்கு முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டு தான் உள்ளது. அது தெரிந்த பிறகும் அரசியல் செய்வதற்காக விமர்சனங்கள் வைக்கப்படுகிறது. அதற்கு பதில் சொல்லத் தேவையில்லை",  என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

 இதையும் படிக்க    | முதலீட்டாளர்களை கொண்டு வருகிறோம் என்பது நாடகமாக தெரியவில்லையா? சீமான் கேள்வி!