குறுவை சாகுபடி; இன்று ஆலோசனைக் கூட்டம்!

குறுவை சாகுபடி; இன்று ஆலோசனைக் கூட்டம்!

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள் குறித்த அமைச்சர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்கும்  ஆலோசனை‌கூட்டம் நாளை தஞ்சையில் நடைபெற உள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் டெல்டா மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதில் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட‌ உள்ளது.

இந்த நிலையில் குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள், உரங்கள், பயிர்க்கடன் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ஐ.பெரியசாமி, , அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

கூட்டத்தில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் வேளாண், கூட்டுறவு, நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்யவுள்ள நிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்க:"கருணாநிதி நூற்றாண்டு விழா" சாதனைகளை நினைவு கூர்ந்த தலைவர்கள்!