உடனே திருப்பி அனுப்புங்கள் : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !!

இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

உடனே திருப்பி அனுப்புங்கள் : டிஜிபி சைலேந்திரபாபு அதிரடி உத்தரவு !!

உயர் நீதிமன்றம் விமர்சனம்

ஆர்டர்லி முறை ஒழிப்பு குறித்து நீதிமன்றம் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த நிலையில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது.

ஆலோசனைக் கூட்டம்

டி.ஜி.பி. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஏ.டி.ஜி.பி-க்கள் மகேஷ் குமார் அகர்வால் ஏ.டி.ஜி. பி சங்கர் ஐ.ஜி லோகநாதன் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உடனே அனுப்புங்கள்

இந்த கூட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார்.

கடும் நடவடிக்கை

மாவட்ட எஸ்.பி அளவில் இருந்து ஏ.டி.ஜி.பி, டி.ஜி.பி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின்  வீடுகளில் அளவுக்கு அதிகமாக தேவையில்லாமல் பணியாற்றக் கூடிய ஆடர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்புமாறு டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருக்கிறார்.

இதை செயல்படுத்தாத அதிகாரியின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.