தி.மு.க. வாக்குறுதி அளித்தபடி மதுக்கடைகளை மூட வேண்டும்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்...

தி.மு.க. வாக்குறுதி அளித்தபடி மதுக்கடைகளை மூட வேண்டும் என தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் வலியுறுத்தியுள்ளார்.

தி.மு.க. வாக்குறுதி அளித்தபடி மதுக்கடைகளை மூட வேண்டும்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்...

ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் எதிர்ப்பு தெரிவித்து, சென்னை தி. நகரில் உள்ள கமலாலயம் முன்பாக, பா. ஜ.க. சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக பா. ஜ.க. தலைவர் எல். முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பா. ஜ.க.  நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டு, ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், நிரந்தரமாக மதுக் கடைகளை மூட வலியுறுத்தியும்,  கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், டீ கடைகளை திறக்க முடியாமல் பலரும் வாழ்வதாரம் இழந்து வரும் நிலையில், டீ கடைகளை திறக்காமல், மதுக்கடைகளை திறப்பது ஏன் என கேள்வி எழுப்பினார்.

மேலும், கடந்த ஆண்டில், டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிராக போராடிய தி.மு.க., தற்போது, டாஸ்மாக் கடைகளை திறப்பது, அதன் இரட்டை நிலைப்பாட்டை காட்டுவதாக உள்ளது என்றும் சாடினார்.