ஜூன் 6 -ஆம் தேதி கூடும் திமுக பொதுக்குழு கூட்டம் : புதிய மாவட்ட செயலாளர்ளும் பங்கேற்பதாக தகவல்!

ஜூன் 6 -ஆம் தேதி கூடும் திமுக பொதுக்குழு கூட்டம் : புதிய மாவட்ட செயலாளர்ளும் பங்கேற்பதாக தகவல்!

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜுன் 6ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஜூன் மாதம் ஆறாம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் புதிய மாவட்ட செயலாளர்களும் பங்கேற்கவுள்ளனர்.

ஓராண்டு ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.