ஹெச் ராஜாவிடம் சிக்கிய திமுக எம்.பி கதிர் ஆனந்த்: தமிழுக்கு வந்த சோதனை

திமுக எம்.பி கதிர் ஆனந்த் அவரது டிவிட்டர் பக்கத்தில் பிழைகளுடன் வாழ்த்து செய்தியை பதிவிட்டதை பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா டேக் செய்து ’நோ கமெண்ட்ஸ்’ என அவரது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

கதிர் ஆனந்த் தமிழகத்தை சேர்ந்த அரசியல்வாதி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார். இவர் திமுக சார்பாக தமிழ்நாட்டின் வேலூர் தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பிரபல திமுக அரசியல்வாதி துரைமுருகனின் மகன் ஆவார்.

இந்த நிலையில் திமுக எம்.பியான கதிர் ஆனந்த், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோரை பிறந்தநாளை யொட்டி திமுக மாவட்டசெயலாளர் நந்தகுமார் நேரில் சந்தித்து ஆசிபெற்றார். இதனை எம்.பி கதிர் ஆனந்த் அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில், இன்று, நமது மாவட்ட செய்யலாளர் திரு நந்தகுமார் பிறந்த நாளை முன்னிட்டு கழகத் பொதுச்செயலாளர் அவர்களை, மற்றும் எண்ணை சந்தித்து வாழ்த்து பெற்றார்.  நானும் அவருக்கு பட்டு வெட்டி அணிவித்து வாழ்த்து தெரிவித்தேன் என பிழையாக பதிவிட்டிருந்தார்.

இதனை டேக் செய்த பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நோ கமெண்ட்ஸ் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.