ஜெயக்குமார் அறிக்கை...ஆர்..எஸ்.பாரதியின் தக்க பதில்..!

ஜெயக்குமார் அறிக்கை...ஆர்..எஸ்.பாரதியின் தக்க பதில்..!

மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கு திராவிட முன்னேற்ற கழகம் தொடக்கம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

ஜெயக்குமாரின் அறிக்கை வருத்தமளிக்கிறது:

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 10% இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க. இரட்டை வேடம் போடுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டிருப்பது வருத்தமளிப்பதாக கூறினார். தொடர்ந்து, 10%  சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு நாடாளுமன்ற தேர்தலுக்கு இரண்டு மாதத்திற்கு முன்பாக தான் அவசர அவசரமாக கொண்டு வந்ததாக தெரிவித்தார்.

இதையும் படிக்க: எம். ஜி.ஆர்.வழியில் முதலமைச்சர் ஸ்டாலின்...குற்றம்சாட்டும் ஜெயக்குமார்!

"இடஒதுக்கீட்டுக்காகவே உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக":

அதன் பிறகு அந்த சட்டத்தை மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்த போது 10% இட ஒதுக்கீட்டை திமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால், அப்போது அதிமுகவினர் வெளிநடப்பு செய்து விட்டார்கள். அன்று அதிமுக மட்டும் எதிர் இருந்தால் இந்த சட்டம் நிறைவேறி இருக்காது என்பதை தெரிவித்த அவர், திமுக தான் சட்டத்தை கொண்டு வந்தது போன்று தவறான கருத்தை ஜெயக்குமார் சொல்வதாக குறிப்பிட்டார்.

அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்?:

தொடர்ந்து, 10% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆளும் கட்சியாக இருந்த அதிமுக அப்போது அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? என கேள்வி எழுப்பிய அவர், இட ஒதுக்கீட்டுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக என்று கூறினார்.

ஜெயக்குமாரின் அறிக்கைகு பதிலடி:

இந்தியா முழுவதும் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வாங்கி கொடுத்தது திமுக தான், அதனால்  10% இட ஒதுக்கீட்டில் குறை சொல்வதை விட்டுவிட்டு எங்கள் பின்னால் அதிமுக நின்றால் தமிழக மக்கள் கடந்த காலத்தில் அதிமுகவினர் செய்த பாவத்தை மன்னிப்பார்கள் என்று ஜெயக்குமாரின் அறிக்கைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பதில் அளித்தார்.