பத்திரிகையாளர் நலன் நாடும் அரசு திமுக.... உதயநிதி!!

பத்திரிகையாளர் நலன் நாடும் அரசு திமுக.... உதயநிதி!!

பத்திரிகையாளர் நலன் நாடும் அரசாக திமுக எப்போதும் இருக்கும் என்று, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். 

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை சார்பில், பத்திரிகையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல், தமிழரசு இதழின் ஒரு லட்சத்து ஒன்றாவது சந்தாதாரருக்கு அந்த இதழை வழங்குதல், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு 34.49 கோடி ரூபாய் மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பணியின் போது உயிர் இழந்த அரசு அச்சக பணியாளர் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்பப்படையில் பணி ஆணை வழங்குதல், ஆகிய நிகழ்ச்சிகள்  நடைபெற்றன.

இதில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் சுவாமிநாதன் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் எபினேசர், தாயகம் கவி, சென்னை மாநகராட்சி மேயர் ப்ரியா, துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி வரும் வரிசையில், பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணியை, தாம் துவக்கி வைத்தது, மகிழ்ச்சியளிப்பதாக கூறினார்.  மேலும் கொரோனா காலகட்டத்தில் செய்தியாளர்களுக்கு 5000 ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், பத்திரிக்கையாளர் நலன் காக்கும் அரசாக, இந்த அரசு எப்போதும் இருக்கும் என்றார்.

இதையும் படிக்க:   வலுவடையும் மோச்சா புயல்... 11 மாவட்டங்களில் கனமழை!!