”திமுக தமிழ் மொழியை அழிக்க வேண்டாம்”.. தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்..!

மத்திய கல்விக் கொள்ளைகளை அமல் படுத்த வேண்டும் என கோரிக்கை முழக்கம்..!

”திமுக தமிழ் மொழியை அழிக்க வேண்டாம்”.. தமிழ்நாடு முழுவதும் பாஜக ஆர்ப்பாட்டம்..!

பாஜக ஆர்ப்பாட்டம்:

தமிழ் மொழிக்கு தி.மு.க. அரசு முடிவுரை எழுத நினைப்பதாக புகார் கூறி, ஆளும் திமுக அரசை கண்டித்து,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தஞ்சை ரயில் நிலையம் முன்பாக பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்டனர். 

கோரிக்கை முழக்கங்கள்:

இதில், மத்திய கல்விக் கொள்ளைகளை அமல் படுத்த வேண்டும், தமிழ் மொழியை அழிக்க வேண்டாம் போன்ற கோரிக்கைகளை முழக்கங்கள் எழுப்பப்பட்டது. 

சேலத்தில் ஆர்ப்பாட்டம்:

இதேபோன்று, சேலம் மாநகரில்  பா.ஜ.க. மாவட்ட தலைவர் சுரேஷ் பாபு தலைமையில் 500க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று, தி.மு.க. அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

திருச்சியில்..

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அக்கட்சியின மாவட்ட தலைவர் ராஜசேகரன்  தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  பா.ஜ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டு, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

கிருஷ்ணகிரியில்..

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே, தமிழ் மொழியை ஆதரித்தும் திமுக அரசை கண்டித்தும் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில்,பாஜக மாநில துணை தலைவர் நரேந்திரன் கலந்துகொண்டு கண்டன உறையாற்றினார். இதில், பா.ஜ.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.