ஜி.எஸ்.டி. வரியை அவசர கதியில் செயல்படுத்தியதால் அடிப்படை குறைபாடு உள்ளது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  கெத்து காட்டிய டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்...

ஜி.எஸ்.டி. வரியை அவசர கதியில் செயல்படுத்தியதால் அடிப்படை குறைபாடு உள்ளது:  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில்  கெத்து காட்டிய  டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்...

ஜி. எஸ்.டி. வரியை அவசர கதியில் செயல்படுத்தியதால் அடிப்படை குறைபாடு உள்ளது என ஜி எஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையிலான 43 வது ஜி எஸ்டி கவுன்சில் கூட்டத்தில் 
சென்னை தலைமை செயலகத்தில் இருந்து நிதி அமைச்சர் டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் கானொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய  அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ஜி. எஸ்.டி. வரியை அவசர கதியில் செயல்படுத்தியதால் அடிப்படை குறைபாடு உள்ளது என்றும் அவை தற்போது வெளிபட தொடங்கியுள்ளதாக தெரிவித்தார்.

 ஜி. எஸ்.டி வரியின் வடிவமைப்பு, சிறு குறு தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏற்றதாக இல்லை  என்பதால் அவை தீர்க்கப்பட வேண்டும் என்றார், கண்காணிப்பு குழு எளிமையாக செயல்படுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.

மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கணக்கில் நிதி திரட்டப்படுவதும், அவற்றை மாநில அரசுகளுக்கு உரிய முறையில் வழங்குவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவை தொகையை பெறுவதற்கு போராட வேண்டிய நிலை உள்ளதாக பேசிய அமைச்சர்,ஒவ்வொரு பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படுவதில்லை என்றார், பல மொழிகளில் பேசுபவர்கள் கவுன்சில் உறுப்பினர்களாக இருப்பதும், மூன்று மாதத்துக்கு ஒருமுறை கவுன்சில் கூடுவதும் பலவீனமான ஒன்றாக உள்ளது என பழனிவேல் தியாகராஜன் பேசினார்.