தீபாவளி பண்டிகை - ரயில்களில் முன்பதிவு இன்று தொடங்கியது !!

தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

தீபாவளி பண்டிகை - ரயில்களில் முன்பதிவு இன்று தொடங்கியது !!

தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி புறப்படுவர்.

பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளி கொண்டாட புறப்படும் நிலையில் அவர்களின் பயணம் இனிதாக அமைய போக்குவரத்துத்துறை மற்றும் ரயில்வே துறை ஆகியவை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ரயில்களில் தீபாவளி பண்டிகையை ஒட்டி செல்வோர் 120 நாட்களுக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். தீபாவளிக்கு சொந்த ஊர் செல்பவர்கள் ரயில்வே டிக்கெட் கவுண்டர்கள் மற்றும் ஐஆர்சிடிசி மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊருக்குச் செல்ல விரும்புபவர்கள் இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை வருவதால் அக்டோபர் 21ம் தேதியான வெள்ளிக்கிழமையே மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வமாக இருப்பர். 

இதனால் வெள்ளிக்கிழமையான அக்டோபர் 21ஆம் தேதி டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அக்டோபர் 22ஆம் தேதி பயணம் செய்ய வரும் 24ஆம் தேதியும், அக்டோபர் 23ஆம் தேதி பயணம் செய்ய வரும் 25ஆம் தேதியும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.