டி.டி.விக்கு FOOD POISION,,! மருத்துவமனையில் திடீர் அனுமதி..! 

டி.டி.விக்கு FOOD POISION,,!  மருத்துவமனையில் திடீர் அனுமதி..! 

அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் திடீர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக - அமமுக:

அதிமுக உட்கட்சி விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், இது வரை அவ்வளவாக வெளிச்சம் படாமல் இருந்த அமமுக தற்போது மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளது. அமமுக அதிமுக இணைவு குறித்து தற்போது பலவிதமான கருத்துக்கள் வெளிப்பட்டு வருகிறது.

ஓபிஎஸ் அழைப்பு:

ஜூலை 11 இல் நடந்த அதிமுக பொதுக்குழு செல்லாது என உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்த பின்னர், கட்சி அதிகாரம் ஓபிஎஸ் கைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. சசிகலா, டி.டி.வி.தினகரன், ஈபிஎஸ் என அனைவரும் இனணந்து அதிமுகவை வழி நடத்துவோம் என அழைப்புவிடுத்திருந்தார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.

கூட்டணி ஓகே, இணைவு நோ..:

அது குறித்து பேசிய டி.டி.வி தினகரன், அமமுக தற்போது தனி கட்சியாக இருப்பதால், கட்சியை விட்டுவிட்டு அதிமுகவில் இணைவது என்பது சாத்தியம் இல்லை எனவும், அதிமுக + அமமுக இணைவு வேண்டுமானால் நடக்கலாம், நேரம் வரும் போது அது குறித்து பார்க்கலாம் எனக் கூறியிருந்தார். 

மேலும் படிக்க: கூட்டணி ஒகே...ஆனால் இதுக்கு வாய்ப்பே இல்லை...டிடிவி அதிரடி...அப்போ ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ்?

மருத்துவமனையில் அனுமதி:

அமமுக நிர்வாகிகளை சந்திக்கவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் தஞ்சாவூர் சென்றுள்ள டிடிவி தினகரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக கூறப்பட்டது.

உணவு ஒவ்வாமை:

இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுல டி.டி.வி. தினகரன், உணவு ஒவ்வாமை காணரமாக சிறிய உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், தஞ்சையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னர் ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என மருத்துவர்கள் தெரிவித்து இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

நேரில் வரவேண்டாம்:

மேலும், கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும், நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்வதாக பதிவுள்ளார்.

அவர் விரைவில் குணமடைந்து கழக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அவரது தொண்டர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.