நாகையில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி...

நாகை அருகே ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

நாகையில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற மாற்றுத்திறனாளி...
நாகை அருகே அரசின் உதவிகளை வழங்க மறுத்த ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து, மாற்றுத்திறனாளி ஒருவர் குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடி பகுதியைச் சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பக்கிரிசாமி. இவரது மனைவியும், மகனும் மாற்றுத்திறனாளிகள்.
 
இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த மூவரும், நுழைவு வாயில் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டதில், பக்கிரிசாமி அரசின் பசுமை வீடு  திட்டத்தின் கீழ் வீடு கட்டி வருவதும், ஆனால்,  அரசு சார்பில் வழங்கப்படும்  கம்பி, சிமெண்ட்  உள்ளிட்டவற்றை ஊராட்சி மன்ற தலைவர் தர மறுத்ததும் தெரியவந்தது. உடனடியாக குறைகளை கேட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதா உறுதியளித்தனர்.