தீபாவளி வந்தாச்சு.. அரசு ஊழியர்களுக்கு போனஸும் அறிவிச்சாச்சு.. எவ்வளவு தெரியுமா?

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியம் போனஸாக வழங்க மத்திய அரசு உத்தரவு..!

தீபாவளி வந்தாச்சு.. அரசு ஊழியர்களுக்கு போனஸும் அறிவிச்சாச்சு.. எவ்வளவு தெரியுமா?

தீபாவளி போனஸ்:

தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாநில அரசு சார்பில் ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. 

10% போனஸ் வழங்க உத்தரவு:

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,  போக்குவரத்துதுறை, மின்வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு ஆலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்க உத்தரவிட்டுள்ளது. 

போனஸ் + கருணை தொகை:

சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு, 8 புள்ளி 33 சதவீதம் போனஸும், 1 புள்ளி 67 சதவீதம் கருணை தொகையும் என மொத்தம் 10 சதவீதம் வரை போனஸ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

78 நாள் ஊதியம்:

நேற்று முன்தினம், ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு  78 நாள் ஊதியத்தை போனசாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.